டுபாயிலிருந்து 326 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க முயன்றபோது, சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து விமானம் மீது லேசர் லைட் அடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு, விமானத்தை சென்னை விமான நிலையாயத்தில் பத்திரமாக தரை இறக்கினார்.2 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது பொலிஸார் இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.