திருகோணமலை – கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகய்திற்கு முன்பாக ஒரு பட்டதாரி வித்தியாசமான முறையிலான ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பட்டம்பெற்று வெளியேறிய சீ.எம் மொஹமட் சபீர் என்பவரே இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மாங்காய் விற்பனை செய்வது போல் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தார்.
தாம் பட்டம் பெற்று வெளியேறிய காலத்தில் இருந்தே பலவகையான பரீட்சைகளை தாம் எழுதியதாகவும் இருப்பினும் இந்த அரச கட்டமைப்பானது தம்மைப்போன்ற பலரை இன்னமும் புறக்கணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களை இந்த அரசு வழங்கத் தவறுகின்றபோது எதற்காக இந்த நாட்டிலுள்ளவர்கள் வீணாக பட்டம் பெற்று காலத்தினை வீணடிக்கவேண்டும் என இதன்போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.