சரிகமப வின்னர் தவினேஷ் தொடர்பில் சீனிவாஷ் வெளியிட்ட தகவல்..!

 

சரிகமப கிராண்ட் ஃபினாலேவில் ரன்னர் அப்பான ஹேமித்ராவின் பெயரை முதலில் சொன்னதால் அவர்தான் வின்னர் என திவினேஷ் நினைத்துக் கொண்டதாகவும் அந்த அளவுக்கு அப்பாவியாக அவர் இருப்பதாகவும் பாடகர் சீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த இளம் வயதில் திவினேஷ் சாதித்தது விசித்திரமாக உள்ளது. தனது தந்தைக்கு ஒரு பால் வேன் வாங்கித் தர வேண்டும் என்பது தனது கனவு என திவினேஷ் சொன்னதும் எதுவுமே திட்டமிடப்படவில்லை.

ஆனால் எல்லாமே தானாக அமைந்துவிட்டது. பால் வேன் வாங்குவதில் என்னோட பங்களிப்பு குறைவுதான். ஆனால் உலகில் திவினேஷின் பாடலை கேட்கும் ஏராளமான மக்கள் எங்கள் அலுவலகத்திற்கு போன் செய்து திவினேஷுக்கு உதவி செய்ய விரும்பினர்.

திவினேஷ்

அந்த வகையில் திவினேஷ் தனது அப்பாவுக்கு பால் வேன் வாங்கித் தர உதவிய நல்ல உள்ளங்களுக்கு சரிகமப டீம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் எல்லாம் வேன் வாங்க பணம் அளித்தவர்கள்:

பாலாஜிசிவாநாகேஸ்வரிபால்வண்ணன் மற்றும் உமாகாட்வின்மயில்வாகனன்கிரிவலம்ஜாக்தங்கவடிவேல் மற்றும் கலா கிருஷ்ணன்

பால் வண்டியில் DSP என குறிப்பிட்டுள்ளனர். அதில் D for Dhivinesh, S for Santhosh (அவருடைய அண்ணன்), P for Pratap (திவினேஷின் தந்தை).

போட்டோ எடுத்த மக்கள்

கிராண்ட் ஃபினாலே முடிந்ததும் திவினேஷுடன் நிறைய பேர் புகைப்படம் எடுத்துக் கொண்டதால் அவருக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் எங்களிடம் வந்து ஹேமித்ரா அக்காதானே ஜெயிச்சாங்க, ஏன் என் கூட எல்லாரும் போட்டோ எடுக்குறாங்கன்னு கேட்டார்.

வின்னர் பெயர்

ஏனென்றால், பொதுவாக நிகழ்ச்சியில் ரன்னர் அப் பெயரை முதலில் சொல்லிவிட்டு பிறகு வின்னர் பெயரை சொல்வோம். அது போல் ரன்னர் அப் என ஹேமித்ரா பெயரை முதலில் கூறியதால் அவர்தான் வின்னர் என திவினேஷ் நினைத்துக் கொண்டுள்ளார். இப்படிப்பட்ட அப்பாவியான பையன் திவினேஷ், அதனால்தான் அவருடைய பாடலில் வார்த்தைகளை காட்டிலும் உண்மை இருக்கிறது என சீனிவாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும் திவினேஷுக்கு எல்லாரும் சேர்ந்து வாங்கிக் கொடுத்த பால் வேனின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

6 போட்டியாளர்கள்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இதில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். 6 போட்டியாளர்கள் இறுதி கட்டத்தை எட்டினர். அதில் திவினேஷ், யோகஸ்ரீ, மஹதி, ஹேமித்ரா, அபினேஷ், ஸ்ரீமதி ஆகியோர்தான்.

திவினேஷுக்கு ரூ 10 லட்சம்

இந்த நிகழ்ச்சியில் திவினேஷ் முதலிடத்தை பெற்றார். அவருக்கு ரூ 10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. அது போல் யோகஸ்ரீ, ஹேமித்ரா ஆகியோர் இரண்டாவது , மூன்றாவது இடத்தை பிடித்துள்ளனர். மேலும் திவினேஷுக்கு மெல்லிசை இளவரசர் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

யோகஸ்ரீக்கும் யோகம்

அது போல் 13 வயதான யோகஸ்ரீயின் குரல் பெரும்பாலானோருக்கு பேவரைட். பழைய பாடல்களை தேடி பிடித்து பாடுவதில் கெட்டிக்காரி. யோக ஸ்ரீயின் பாடல்களை கேட்ட பிறகுதான் சரிகமப நிகழ்ச்சியை தான் பார்த்ததாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

வீடு கட்ட இடம்

யோக ஸ்ரீக்கு 1700 சதுர அடி கொண்ட இடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் அவர் வீடு கட்டிக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளனர். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளரிடம் யோகஸ்ரீயின் பெயரை பரிந்துரைப்பதாக அவர் வாக்கு கொடுத்திருக்கிறார்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post