மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , காக்கைதீவு சந்தைக்கு அருகாமையில் கார் மோதி பசுமாடு மரணமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
யாழ் நோக்கி பயணித்த கார் ஒன்றே இவ்வாறு பசுமாட்டுடன் மோதி விபத்திற்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தராத நிலையில் பொலிஸாருக்கு இது குறித்து அங்கு நின்ற பொதுமக்களால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அங்கு விரைந்த பொலிஸார் மாட்டின் உரிமையாளரை அடையாளம் காணாத நிலையில் பிரதேச சபையின் ஊடாக உரிமையாளரை அடையாளம் காண்பதற்காக பிரதேச சபையிடம் பசுமாட்டினை கையளித்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.