இந்தியன் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 148 ஆக அதிகரிப்பு.
விமானத்தில் ஏற்கனவே 200 ற்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கின்றார்கள். விமானம் குடியிருப்புப்பகுதியில் வீழ்ந்து நொருங்கியிருக்கின்றது. இந்தக் கட்டடம் ஒரு Medical college என்றும் கூறப்படுகின்றது. ஒரு பகுதி Canteen ஆக இருக்கலாம். சாப்பிட்ட தட்டுகளும் உணவுகளும் அப்படியே மேசை மீது இருக்கின்றன. ஆகவே பயணிகளைத் தாண்டி அங்குள்ள சாதாரண மக்களும் விபத்தில் சிக்கியிருக்கின்றார்கள்.
நீண்ட தூரம் பிரயாணம் (இந்தியா - இலண்டன்) என்பதால் அதிக அளவிலான எரிபொருள் இருந்திருக்கும். Boeing 787 ரக விமானங்களின் fuel capacity கிட்டத்தட்ட ஒரு லட்சம் லீட்டருக்கும் அதிகமாக இருக்கலாம். அது கீழே வீழ்ந்து நொருங்கும் போது ஏற்பட்ட அனர்த்தத்தினால் மிகப்பெரிய அளவு விமானம் தீப்பிடித்து எரிந்திருக்கின்றது.
விமான அனர்த்தத்தை முன்கூட்டியே அறிந்த விமானி MayDay Call கொடுத்திருக்கின்றார். MayDay call என்பது விமானங்களில் அதிக பட்ட அவசர நிலையை குறிப்பிடும் ஒரு வார்த்தை பிரயோகமாகும். மிகப்பெரிய அனர்த்த நிலையின் போது விமானி Mayday Mayday என்று அழைப்பில் குறிப்பிடுவார்.
விமானத்தில் அதிகளவு பயணிகள் இருந்தமையாலும் குடியிருப்பு பகுதியில் வீழ்ந்து தீபற்றி எரிந்தமையாலும் உயிரிழப்புகள் அதிகமாகலாம். விபத்தின் புகைப்படங்களை பார்க்கும் போது விபத்தின் கனதி தெரிகின்றது.
எதிர்காலத்தில் இவ்வாறான விபத்துகள் ஏற்படுவதை தவிர்ப்பதுதான் உயிரிழந்தவர்களிற்கு செலுத்தும் அஞ்சலிகள்.