இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 170 பேர் உயிரிழந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று பிற்பகல் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்தை சேர்ந்வர்கள். ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.