பலாங்கொடை ரஜவக மகா வித்தியாலயத்தில் உள்ள கட்டிடமொன்றின் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இந்த அனர்த்தம் இன்று (12) பிற்பகல் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த மேலும் 16 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.