இந்த கேள்விக்கான விடையை விஞ்ஞானிகள் நீண்ட காலத்திற்கு முன்னரே கண்டுபிடித்துவிட்டனர். அதாவது ஒவ்வொரு 26 விநாடிக்கும் ஒரு முறை பூமி துடிப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இது எப்படி சாத்தியம் என்பதை விஞ்ஞானிகளால் இன்று வரை விளக்க முடியவில்லை.
யோசித்து பாருங்கள், உங்கள் கால்களுக்கு அடியில் பூமி உயிருடன் துடித்துக்கொண்டிருக்கிறது. ஒரு தாளம் போல அது மெதுவாக இசைக்கிறது.
இப்போது சொல்லுங்கள் உங்களால் வேகமாக நடக்க முடிகிறதா? வேகமாக குதிக்க தோன்றுகிறதா? மண்வெட்டியை எடுத்து ஒரு கொத்து கொத்த தோன்றுகிறதா? ஆனால் இதெல்லாம் ஏதோ இன்று புதியதாக கண்டுபிடிக்கப்பட்டது கிடையாது.
1960களிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பல்வேறு விஷயங்கள் இது குறித்து தெரிய வந்திருக்கிறது. சிலர் கடல் அலை காரணமாகத்தான் இந்த சத்தம் ஏற்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். அப்படியெனில் உலகம் முழுவதும் ஒரேமாதிரித்தானே கடல் அலை இருக்க வேண்டும். ஆனால் மெரினாவிலேயே ஒரு பகுதியில் வரும் அலைக்கும் இன்னொரு பகுதியில் வரும் அலைக்கும் நேர வித்தியாசங்கள் இருக்கிறது.
இது எப்படி 26 விநாடிகளுக்கு ஒரு முறை சப்தத்தை உருவாக்கும்? என கேள்வி எழுந்திருக்கிறது.
1960களுக்கு பின்னர் முதன் முறையாக 2005ல் கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், நவீன கருவிகளால் அளக்கப்பட்ட, நில அதிர்வுத் தரவை பயன்படுத்தி இந்த விஷயத்தை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இன்று வரை பல்வேறு ஆய்வாளர்கள் இந்த துடிப்பை கண்டுபிடித்துள்ளனர்.
ஆனால் அறிவியலில் ஒரு விஷயம் மட்டும் உண்மை. உயிர் உள்ள உயிரினத்திலிருந்துதான் துடிப்புகள் வெளிவரும். பூமிக்கு உயிர் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே இதை துடிப்பாக பார்க்க முடியாது. அப்படி எனில அது என்ன?
சீன விஞ்ஞானிகள் இதற்கு இன்னொரு முக்கியமான காரணத்தை முன்வைத்தனர். எரிமலைகள் வெடிப்பினால் இந்த சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று கருதினர். இந்தியாவில் எரிமலைகளே கிடையாது. ஆனால் இங்கும் 26 விநாடிக்கு ஒரு முறை துடிப்பை உணர முடிகிறதே எப்படி? இந்த கேள்விக்கு சீனாவிடம் பதில் இல்லை.
இப்படியாக கேள்விகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே இருக்கின்றன. இதற்கான பதில்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. உங்களுக்கு இதற்கான காரணம் என்ன என்று தெரிந்தால்? யூகமாக இருந்தாலும் பரவாயில்லை, அதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.