குடும்ப வன்முறைகள் ஒவ்வொரு நாளும் பெருகி வருகின்றன.. இதில் சில மனைவிகள் செய்யும் கொடூரங்களும், பயங்கரங்களும் மக்களை நிலைகுலைய செய்துவிடுகின்றன.. அப்படியொரு சம்பவம்தான் சமீபத்தில் மீரட்டில் நடந்தது..
இது தொடர்பாக 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், அவர்களிடம் போலீஸ் விசாரணையும் நடந்தது. இப்போது இந்த விவகாரத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி பரபரப்பை தந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் இந்திரா நகர் பகுதியில் வசித்து வரும் தம்பதி சவுரவ் ராஜ்புத் - முஸ்கான்.. 29 வயதான சவுரவ், அமெரிக்காவில் ஒரு கம்பெனியில் வணிக கடற்படையில் வேலை பார்த்து வந்தார். கடந்த பிப்ரவரி 24ம்தேதி, இவரது 6 வயது மகளுக்கு பிறந்தநாள் என்பதால், சொந்த ஊருக்கு வந்துள்ளார்..
ஆனால், அடுத்த சில நாட்களில் சவுரவ் காணாமல் போனதால், குழம்பிப்போன உறவினர்கள், மீரட் நகர போலீசில் புகார் தந்தனர்.. போலீசாரும் சவுரவ்வை தேடி வந்தனர்.. இறுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ராஜ்புத் சடலமாக மீட்கப்பட்டார்.
ட
இதுகுறித்து மீரட் நகர எஸ்பி செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "சவுரவ் தன்னுடைய மனைவி முஸ்கானை காதலித்து கடந்த 2016ல் திருமணம் செய்து கொண்டார்.. முஸ்கான் மீதுள்ள காதலுக்காகவே, தன்னுடைய வெளிநாட்டு வேலையை சவுரவ் கைவிட்டார்.. ஆனால், முஸ்கானுக்கு, ராஜ்புத்தின் நண்பரான ஷாஹில் என்பவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த முறைகெட்ட உறவு, சவுரவ்வுக்கு தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.. மனைவியை கண்டிக்கவும், தம்பதிக்குள் தகராறு வெடித்து, விவாகரத்து வரை சென்றுள்ளது.. எனினும், தன்னுடைய பெண் குழந்தையின் எதிர்காலத்தை கருதி, சவுரவ் மீண்டும் கடந்த 2023ல் அமெரிக்காவுக்கு வேலைக்கு சென்றார்..
கடந்த பிப்ரவரி 24ம் தேதி, 6 வயது மகளின் பிறந்தநாள் என்பதால், அமெரிக்காவில் இருந்து சவுரவ் மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறார்..
கணவர் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்ததால், முஸ்கானும், ஷாஹிலும் பதறிப்போனார்கள்.. உடனே சவுரவ்வை கொலை செய்ய முடிவு செய்தனர்.. இதற்காக சவுரவ்வுக்கு கடந்த மார்ச் 4ம் தேதி, சாப்பாட்டில் தூக்க மாத்திரை கலந்து தந்திருக்கிறார் முஸ்கான்..
ராஜ்புத்தும் அதை சாப்பிட்டுவிட்டு அசதியில் தூங்கிவிடவும், கள்ளக்காதலர்கள் 2 பேரும் கூர்மையான ஆயுதங்களால் சவுரவ்வை குத்தி கொன்றுள்ளனர்.. பிறகு சடலத்தை மறைக்க, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரின் உடலை 15 துண்டுகளாக மனைவி வெட்டினார் முஸ்கான்.
சவுரவ்வின் இதயத்தை ஷாஹில் கத்தியால் குத்தியதும், அவரது தொண்டையை மனைவி அறுத்தாராம்..
கைகளை தனியாக வெட்டியிருக்கிறார்கள். வெட்டப்பட்ட உடல் பாகங்களை வீட்டில் இருந்த டிரம்மில் போட்டுள்ளனர்.. பிறகு சிமெண்ட் கலவையை கொட்டி, உடல் பாகங்களையும் டிரம்மில் போட்டு மூடிவிட்டார்கள்.
வெளிநாட்டிலிருந்து வந்த சவுரவ்வை காணோமே? என்று அக்கம்பத்தினர் முஸ்கானிடம் கேட்டதற்கு, இங்கே வெயில் அதிகம் என்பதால், மலை வாஸ்தலத்திற்கு டூர் போயிருக்கிறார் என்று சொல்லி சமாளித்துள்ளார்..
எனினும் இதே கேள்வியை மீண்டும் கேட்பார்களே என்று நினைத்த முஸ்கான், "என் கணவர் வீடு திரும்பவில்லை.. அவரை தேடி செல்கிறேன்" என்று சொல்லிவிட்டு , கள்ளக்காதலனுடன் இமாச்சல் பிரதேசத்துக்கு ஜாலியாக டூர் போய்விட்டார்.. அப்போது கொலை செய்யப்பட்ட கணவனின் செல்போனையும் கையோடு கொண்டு சென்றிருக்கிறார் முஸ்கான்..
இப்படிப்பட்ட சூழலில்தான், சவுரவ்வை காணவில்லை என்று உறவினர்கள் போலீசில் புகார் தரவும், அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்துள்ளனர்.. முஸ்கான் ஏற்கனவே தங்களிடம் மழுப்பலான பதிலை சொன்னதை அங்கிருந்தவர்கள் சொல்லவும், இதற்கு பிறகுதான், முஸ்கானையும், அவரது கள்ளக்காதலன் சாஹில் என்பவரையும் தேடி கண்டுபிடித்தோம்.. சவுரவ்வை கொடூரமாக கொன்றதை 2 பேருமே வாக்குமூலமாக தந்தனர்..
ஆனால், டிரம்மில் பூசப்பட்டிருந்த சிமெண்ட் கலவையை உடைத்து திறக்க முடியவில்லை.. எனவே, வீட்டிலிருந்து டிரம்மை, ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டு பிணவறைக்கு கொண்டு சென்று, அங்கு துளையிடும் இயந்திரத்தினை பயன்படுத்தி, டிரம்மை உடைத்து, சவுரவ்வின் சிதைந்த உடல் பாகங்களை வெளியே எடுத்தோம்" என போலீசார் கூறியிருந்தனர்.
இந்த கொலையும், கொலையாளிகளின் வாக்குமூலமும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை தந்திருந்தன.. அப்போது, தங்களின் மகள் முஸ்கான், இந்த சமூகத்தில் வாழ தகுதியற்றவர் என்றும், அவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்றும் பெற்றோர் கோர்ட்டுக்கு சென்றார்கள்.. அநியாயமாக கொலை செய்யப்பட்ட தங்களது மருமகனுக்காக நீதி கோரினார்கள்..
இந்த வழக்கு மீரட் கோர்ட்டில் சமீபத்தில் நடந்தபோது, பிரதான குற்றவாளியான முஸ்கான், தன்னுடைய வழக்கை தானே வாதாட விரும்புவதாகவும், அதற்காக சட்டப் படிப்பை பயில அனுமதிக்குமாறு சிறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருந்தார்..
அந்த கோரிக்கையில், "என் சார்பாக என்னுடைய வக்கீல் வாதாடவில்லை.. அவரது செயலால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன்.. என்னுடைய வழக்கை தனியாக எதிர்கொள்ள முடிவு செய்திருக்கிறேன்" என்று முஸ்கான் கேட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால், முஸ்கான், ஷாஹில் இருவரின் ஜாமீன் மனுக்களுமே நிராகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் மாவட்ட ஜெயிலில் கள்ளக்காதல் ஜோடி அடைக்கப்பட்டனர்.
முஸ்கான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறாராம்.. எனவே, சட்டப் படிப்பை தொடர, முதலில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடிக்க வேண்டும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
இதற்காக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) மூலம் அவர் படிப்பைத் தொடரலாம் என்றும், சிறை அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்குவார்கள் என்றும் சிறை கண்காணிப்பாளர் விரேஷ் ராஜ் ஷர்மா தெரிவித்துள்ளார்..
முஸ்கனின் பெற்றோர்களான கவிதா மற்றும் பிரமோத் ரஸ்தோகி ஆகியோர் தங்களது மகளுக்கு எதிராக சாட்சியமளித்துள்ளதால், அவர்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இதனிடையே, ஜெயிலில் வழக்கமான மருத்துவ பரிசோதனை அனைத்து கைதிகளுக்கும் செய்யப்பட்டது.. அந்தவகையில் முஸ்கானுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.. இதில், முஸ்கான் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.