ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு கிரகங்கள் தங்கள் நிலையை தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் சரியான நிலையில் அமரும் போது ராஜயோகங்கள் உருவாகின்றன.
அதன் விளைவுகள் அனைத்து ராசிகளிலும் பிரதிபலிக்கிறது.
ஜூன் 29 அன்று, சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் சஞ்சரித்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறார். அதேசமயம் ஜூன் 06, 2025 அன்று, புதன் தனது சொந்த ராசியான மிதுனத்தில் சஞ்சரித்து, பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார்.
இந்த சூழ்நிலையில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு, பத்ர மற்றும் மாளவ்ய ராஜயோகம் ஒன்றாக உருவாகிறது. இந்த இரட்டை ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் மிகப்பெரிய ஆதாயங்களை அடையப்போகிறார்கள்.
அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மிதுனம்
பத்ர மற்றும் மாளவ்ய மகாபுருஷ ராஜயோகத்தால் மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு மிகவும் சாதகமான பலன்கள் உருவாக்கப்போகிறது. இந்த ராஜயோகம் மிதுன ராசியின் லக்னத்திலும் 12-வது வீட்டிலும் உருவாகி இருப்பதால், அவர்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பெருமளவில் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிநிலை அதிகரிக்கும் மற்றும் வேலையில் இருப்பவர்கள் வெற்றிப் பாதையில் முன்னேறுவார்கள்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட முடியும். இந்த காலகட்டத்தில் நாட்டிற்குள்ளும், வெளிநாட்டிற்கும் பயணம் செய்ய வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும் இதன்மூலம் நீண்ட கால திட்டங்களை சரியாக முடிக்கலாம். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
பத்ர மற்றும் மாளவ்ய மகாபுருஷ ராஜயோகம் உருவாகுவதால், கன்னி ராசிக்காரர்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இதுவரை கிடப்பில் போட்டிருந்த வேலைகளை முடிக்க சரியான வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் தங்கள் வீட்டிற்கு புதிய ஆடம்பரமான பொருட்களை வாங்க முடியும். அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் அதிகரிக்கும்.
திருமணமாகாதவர்கள் இப்போது அவர்களுக்கு பொருத்தமான துணையைக் கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடிவரும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்க வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க முடியும், அவர்களின் தேர்வு முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
மீனம்
பத்ர மற்றும் மாளவ்ய மகாபுருஷ ராஜயோகம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை அளிக்கப்போகிறது. புதன் மீன ராசியின் நான்காவது வீட்டிற்கும், சுக்கிரன் மூன்றாவது வீட்டிற்கும் பெயர்வதால், வெற்றிக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும், மேலும் அவர்களின் முயற்சிகள் நேர்மறையான பலன்களைத் தரும்.
வணிகர்கள் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து எதிர்பாராத லாபத்தைப் பெறலாம், மேலும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. மாணவர்களுக்கு கல்வி வாழ்க்கையில், வெற்றி கிடைக்கும், மேலும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் ஆரோக்கியம் உறுதுணையாக இருக்கும்.