நடிகை மீனா மகளின் தற்போதைய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் மீனா.
இவர், ரஜினி, கமல், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
டாப் நடிகைகளில் ஒருவராக இருந்த மீனா “என் ராசாவின் மனசிலே” என்ற படத்தில் தான் நடிகையாக அறிப்பட்டார்.
இதனை தொடர்ந்து கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார். இதனிடையே நடிகை மீனா, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார்.
இப்படி இருக்கையில், சில வருடங்களுக்கு முன்பு மீனாவின் கணவர் உயிரிழந்தார். கணவரின் இழப்பு மீனாவை ரொம்பவே பாதித்தது. இப்படி பல கஷ்டங்களுக்கு மத்தியில் படங்களில் பிஸியாக இருக்கும் மீனா அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்.
இந்த நிலையில், நடிகை மீனாவின் மகளான நைனிகா தனது அம்மாவை போலவே சிறு வயதிலேயே சினிமாவில் நடிக்க துவங்கிவிட்டார்.
அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016ல் வெளிவந்த திரைப்படம் தெறி. இப்படத்தில் விஜய்யின் மகளாக நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்கிற படத்தில் அரவிந்த் சாமி மகளாக நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நைனிகா, தற்போது நன்றாக வளர்ந்து ஆளே மாறிவிட்டார்.
சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவின் பேரன் திருமணம் நடைபெற்றது. அந்த திருமண விழாவிற்கு மீனா தன்னுடைய மகளுன் சென்றிருந்தார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், “அட தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது..” என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.