சலனம் தீர்க்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{28.6.2025}

 

சனிக்கிழமை, 28 ஜூன் 2025
மேஷம்
aries-mesham
அன்னையின் உடல் நிலையில் அக்கறை தேவை. எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டிய நாள். வாகன சுகம் குறையும். தனவரவும் தூக்கமும் குறையும்.
ரிஷபம்
taurus-rishibum
மன தெம்பும், மனமகிழ்ச்சியும் அதிகரிக்கும் நாள். தனலாபம், புதிய நண்பர்கள் சேர்க்கை என புதிய உற்சாகங்கள் பொங்கும் நாள். தொழில் விரிவாக்கத்துக்கு துணைபுரியும் நாள்.
மிதுனம்
gemini-mithunum
சுமாரான நாள். சோம்பலை விட்டு சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய நாள். படிப்பில் அதிக கவனம் தேவை. அலட்சியம் அல்லல் தரலாம். தொழிலில் புதிய முதலீடுகளை தள்ளிப் போடலாம்.
கன்னி
virgo-kanni
இன்று, உங்கள் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். சுயநம்பிக்கை அதிகரிக்கும், முன்னேற்ற வாய்ப்புகள் கதவை தட்டும். வாழ்க்கையில் முக்கிய திருப்பங்களை எதிர் பார்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
இன்று, இனிய வாகன யோகம் ஏற்படும். காதல் வயப்படும் நாள். இனிய பேச்சு சாதுர்யத்தால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும் நாள். அரசால் ஆதாயம் உண்டு. இந்த நாள் இனிய நாள்.
கடகம்
cancer-kadagam
பெரியோர் நேசம், வாகன யோகம், பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என இராஜயோகங்கள் தரும் நாள். புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். மனம் மகிழும் நாள்.
சிம்மம்
leo-simmam
வீண் வம்பை விலைக்கு வாங்காதீர்கள். பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
துலாம்
libra-thulam
எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். தனலாபம், கல்வியில் வெற்றி, நல் ஆரோக்கியம் என அனைத்தும் நல்லதாக நடக்கும். மனதில் மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.
மீனம்
pisces-meenam
இன்று, எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் இகழ்ச்சியே மிஞ்சும் . குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. பயணத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள்.
தனுசு
sagittarius-thanusu
சுமாரான நாள், அடக்கி வாசிக்க வேண்டிய நாள். உடல் நிலையில் அக்கறை தேவை, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க வேண்டிய நாள். பணிவோடு இருக்கப் பயன் தரும் நாள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இன்று, உங்கள் தெய்வீக செயல்கள் அனைத்தும் முறைப்படி நிறைவேறும். எதிலும் வெற்றி கிட்டும். காம இச்சை அதிகரிக்கும், வாழ்க்கையில் முன்னேற்றங்கள் ஏற்படும் முக்கிய திருப்பங்களை எதிர் பார்க்கலாம்.
கும்பம்
aquarius-kumbam
எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் பெருகும். நல்ல நேரத்தில் நண்பர்கள் கை கொடுப்பர். புதுப் பெண்கள் சிநேகத்தால் துள்ளாத மனமும் துள்ளும். தனவரவு கூடும். பயண சுகம் உண்டு.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post