மூதூர் வலயத்திற்குட்பட்ட பின்தங்கிய கிராமம் ஒன்றில் இருக்கின்ற பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை (06) அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் பாடசாலையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி பாடசாலை இடைவேளை நேரங்களிலும், பாடசாலை முடைவடைகின்ற நேரங்களிலும் பாடசாலையில் வைத்து பலமுறை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டள்ளதாக தெரிய வருகின்றது. தற்போது குறித்த சிறுமி பாடசாலைக்கு செல்ல அச்சப்படுவதாகவும் தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக பெற்றோரால் (08) ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றபோது பொலிஸார் குறித்த சம்பவத்தை பெரிசு படுத்த வேண்டாம். அவருக்கு இடமாற்றம் வழங்கி தண்டனை வழங்குவோம் எனக்கூறி சமாதானமாக செல்லுமாறும் முறைப்பாட்டை ஏற்க மறுத்ததாகவும் தெரிய வருகின்றது. காரணம் ஆசிரியர் இன்னும் சில மாதத்தில் ஓய்வு நிலைக்கு செல்ல இருக்கின்றாராம் அத்துடன் பாடசாலையின் பெயர் பாதிக்கப்படும் என அதிபர் அஞ்சுகின்றாராம். இதைவிட மாணவியின் எதிர்காலம் பாதிக்கும் என்ற நல்ல எண்ணமுமாம்.
குறித்த பாடசாலையில் இதுபோன்ற மேலும் சில துஸ்பிரயோக சம்பவங்களும் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிய வருகின்றது. இதைவிட தரம் 9ல் கல்வி கற்ற மாணவி ஒருவர் சில காலத்திற்கு முன்னர் தற்கொலை செய்திருந்ததாகவும் தெரிய வருகின்றது. தற்கொலைக்கு துஸ்பிரயோகம் காரணமாக இருக்குமா? என்ற கேள்வியும் எழுகின்றது. அதைவிட இந்த ஆசிரியர் எத்தனை பேரை துஸ்பியோகம் செய்துள்ளார் என்ற கேள்வியும் எழுகின்றது.
துஷ்பிரயோகத்தை மேற்கொண்ட ஆசிரியரை பாதுகாக்கும் முகமாக சட்டத்தை பாதுகாக்க வேண்டிய சிலர் விலை போயுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.
பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்கும் மேலும் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுமிகளுக்கும் நீதியை பெற்றுத்தர எத்தனை சட்டத்தரணிகள் தயாராக இருக்கின்றார்கள்?
எங்கேயோ நடக்கின்ற விடயத்திற்காக பொங்கி எழும் எத்தனைபேர் இங்கே நடந்த விடயத்திற்காக குரல் கொடுக்க தயாராக இருக்கின்றீர்கள்?
எமது கோரிக்கைகள்
1.பாதிக்கப்பட்டுள்ள குறித்த சிறுமிக்கும் அவரது குடும்பத்திற்கும் நீதியும், இழப்பீடும் கிடைக்க வேண்டும்.
2.குறித்த விடயம் தொடர்பாக நேர்மையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளப்படுத்தப்பட வேண்டும்.
3.துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும்.
4.வழங்கப்படுகின்ற தண்டனை இவ்வாறான சம்பவங்கள் இடப்பெறாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
மாணவியின் எதிர்காலம் கருதி விபரமாக பதிவிடுவதை தவிர்த்திருக்கின்றேன். எனினும் பொலிசார் இதனை இரகசியமாக முன்னெடுத்து மாணவியின் பெயர் வெளியில் வராமலேயே குறித்த ஆசிரியருக்கு தகுந்த தண்டனையை பெற்றுக் கொடுக்க முடியும்.
இல்லாவிட்டால் குறித்த விடயம் சமூகமயப்படுத்தப்படும்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்குமா?
இந்த அரசிலும் பணம் பாதாளம் வரை பாயுமா?
பாதிக்கப்பட்ட குறித்த சிறுமிக்காக குரல் கொடுக்க எம்மில் எத்தனைபேர் தயாராக இருக்கின்றோம்?