வவுனியா - மன்னார் வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா - மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயம் முன்பாக நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியா குருமன்காடு பகுதியில் இருந்து கண்டி வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் காமினி மகாவித்தியாலயம் முன்பாக பூங்கா வீதியில் திரும்ப முற்பட்டவேளை குறித்த மோட்டார் சைக்கிளின் பின்னால் வேகமாக வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் உட்பட மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.