ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.
குறித்த தாக்குதலை இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதல்கள் ஈரானின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு இலக்குகளை உள்ளடக்கிய முன்கூட்டியே தாக்கும், துல்லியமான, ஒருங்கிணைந்த தாக்குதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய விமான விபத்து விசாரணையில் சர்வதேச புலனாய்வாளர்கள்
இந்திய விமான விபத்து விசாரணையில் சர்வதேச புலனாய்வாளர்கள்
அத்துடன், ஈரானுக்கு எதிராக பல சுற்றுத் தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த தாக்குதலையடுத்து, அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.