முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பொதுமகன் ஒருவரை வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தரான அமலதாஸ் மிரட்டியுள்ளான்.
விசாரணைக்கு வரா விட்டால் கஞ்சா வைத்து தூக்கியிருப்பேன், இனிமேல் உன்னை பொலிஸ் ஸ்டேஷன் பக்கம் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால் கஞ்சா கேஸில் தான் உள்ளே போவாய் என மிரட்டியுள்ளான். இதற்கு காரணம் எதிர் தரப்பிலிருந்து பிச்சைக்காரன் அமலதாஸுக்கு கொடுக்கப்பட்ட இரண்டாயிரம் ரூபா லஞ்சமே.
அநியாயம் செய்தவர்களோ அல்லது நியாயமாக நடப்பவர்களோ பொலிஸ் பிரச்சினையில் இருந்து தப்பிக்க வேண்டுமாக இருந்தால் இவனிடம் இரண்டாயிரம் ரூபா கொடுத்தால் அந்த தரப்புக்கு சார்பாக செயற்படுவான் என மக்கள் தெரிவிக்கின்றனர். தெருப் பிச்சைக்காரர்களை விட மோசமான அளவிற்கு இவனது பிச்சை எடுக்கும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகிறது.
முறைப்பாடு ஒன்றிற்கு விசாரணை செய்ய சென்றவேளை அந்த குடும்பத்துடன் குறித்த காவாலி அநாகரீகமான சொற்பிரயோகங்களை மேற்கொண்டவேளை அங்கிருந்த இளைஞன் ஒருவர் தடி ஒன்றினை எடுத்து விரட்டிச் சென்றவேளை குறித்த காவாலி தலை தெறிக்க தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
கரடி போல் இருக்கும் இவனிடம் அழகான பெண்கள் ஏதாவது பிரச்சினைகளுக்கு சென்றால் மன்மதனாக மாறிவிடுவானாம். அந்த பெண்களிடம் மன்மதனாக மாறும் அதேவேளை அந்த பெண்களுக்கு எதிரானவர்களுடன் அரக்கன் போல செயற்படுவான் என மக்கள் கூறுகின்றனர்.
சங்கரத்தை பகுதியில் உள்ள வர்த்தக ஸ்தாபனம் ஒன்றில் பணிபுரியும் 40 வயது மதிக்கத்தக்க குடும்பப் பெண் ஒருவருக்கும் குறித்த காவாலிக்குமிடையே முறையற்ற தொடர்பு காணப்படுவதாக நேரில் கண்ட சிலர் கூறுகின்றனர். அதைவிட வேறொரு பெண்ணுடனும் தற்போது நெருக்கமாக பழகுவதாகவும் தெரியவருகிறது.
குறித்த காவாலி முறைப்பாடு ஒன்றினை விசாரணை செய்வதற்காக சென்றவேளை பெண் ஒருவருடன் சில்மிஷம் செய்ய முற்பட்டவேளை அந்தப் பெண்ணின் கணவரால் நையப்புடைக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட சம்பவமும் முன்னர் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பகுதியைச் சொந்த இடமாக கொண்ட குறித்த காவாலி வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பிரதேசவாதம் பேசுவதாகவும், தான் யாழ்ப்பாணம் என்று தன்னை உயர்த்தியும் அவர்களை ஏளனமாக பேசுவதாகவும் அறியமுடிகிறது.
அத்துடன் குறித்த பொலிஸ் காவாலியுடன் இணைந்து வெளியே கடமைக்கு செல்வதற்கு ஏனைய பொலிஸார் தயக்கம் காட்டுகின்றனர். இந்த காவாலி செல்லும் இடங்களில் எல்லாம் காவாலித்தனமான செயற்பாடுகளை செய்வதால் தங்களுக்கும் ஆபத்து ஏற்படுமோ என ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயப்படுகின்றனர்.
பிரதி
தினகரன் News