தமிழ் சின்னத்திரை ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். ஆரம்பத்தில் சில சீரியல்களை ஒளிபரப்பி கவனம் பெற்ற இந்த தொலைக்காட்சியில் தற்போது பல ஹிட் சீரியல்களும், ரியாலிட்டி ஷோக்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ரசிகர்களால் பெரிய அளவில் கவனிக்கப்படும் ஷோவாக வலம் வருவது சரிகமப.
கடந்த சில வாரங்களுக்கு முன் சரிகமப லிப் சாம்ப்ஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது, இதில் திவினேஷ் வெற்றி பெற்றார். சிறியவர்களுக்கான சீசன் முடிவுக்கு வந்த வேகத்தில் சீனியர்களுக்கான ஷோ தொடங்கிவிட்டது.
இந்த வாரம் Duet Round நடைபெற்று வரும் நிலையில், போட்டியாளர் பிரதீபாவுடன் திவினேஷ் இணைந்து பாடியுள்ளார். இருவரின் குரல்கள் அரங்கில் இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. தற்போது, இவர்கள் பாடிய பிரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.