10 ஆண்டு மாணவி கர்ப்பம்-2 வருடமாக நடந்த கொடூரம்-சிறுவன் உட்பட பலர் கைது..!

 இந்தியாவின் ஆந்திராவை சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

தனது தாயுடன் வசித்து வந்த மாணவியை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.

 


இதை தொடர்ந்து அவருடைய நண்பர்களும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக 14 பேர் மாணவியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

 

இந்த நிலையில் மாணவி கர்ப்பமானார். பயந்து போய் மாணவி இந்த விவகாரத்தை வெளியே கூறவில்லை. தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

இதுகுறித்து அவருடைய தாயார் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பொலிஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

 

இதில் மாணவியை 14 பேர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஒரு சிறுவன் உட்பட 17 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post