ஈரானின் அதிரடி முடிவு-சிக்க போகும் இலங்கை-மீண்டும் வரிசை யுகமா..?

ஹோர்முஸ் நீரிணை - Strait of Hormuz 

இனிவரும் நாட்களில் அதிகமாகத் தேடப்பட, பேசப்படவிருக்கும் ஒரு பெயர் தான் இது ஈரானுக்குச் சொந்தமான இந்த 21 மைல் அகலம் கொண்ட நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஈரானை அதனுடன் பெரியளவில் ஒத்திசைவு கொள்ளாத ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் ஆகியவற்றிலிருந்து பிரிப்பது இந்தக் குறுகிய, ஆனால் மிகப் பரபரப்பான வர்த்தகப் போக்குவரத்து வழியான நீரிணை தான்.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் (Hormuz) நீரிணை, மத்திய கிழக்கின் எண்ணெய்க் கிணறுகளிலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்துச் செல்லும் ஒரு குறுகிய கடல்வழிப் பாதை. 

தினசரி மில்லியன் கணக்கான பீப்பாய் எண்ணெய் இந்தப் பாதை வழியாகத்தான் பயணிக்கிறது. 

உலக எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% முதல் 30% வரையிலான பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுகிறது. 

ஜப்பான், தென் கொரியா, இந்தியா, சீனா போன்ற பிரதான ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளுக்கும் எண்ணெய் கொண்டு செல்ல இதுவே பிரதான வழி. இந்த நீரிணை மூடப்பட்டால், அது சர்வதேச எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, எண்ணெய் விலைகளை கடுமையாக உயர்த்தும். 

உலகப் பொருளாதாரத்தில் பெரும் ஸ்திரமற்ற தன்மையை உருவாக்கி, எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

ஆனால் அடி வாங்கப்போவது எரிபொருளுக்காக இன்னும் ஓரிரு மாதங்களில் தடுமாறி தள்ளாடப்போகும் நம்மைப் போன்ற நாடுகள் தான்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post