யாழ்ப்பாணம் சங்கானையில் இன்றுமாலை நடந்த கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் மாதகல் கிழக்கு பலநோக்கு கூட்டுறவு சங்க முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பின்னுக்கு இருந்து வந்தவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.