நுவரெலியா – உடப்புசல்லாவ பிரதான வீதியில் வான் கவிழ்ந்து மூவர் காயமடைத்துள்ளனர்.
நுவரெலியாவில் இருந்து ரகலை நோக்கி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று (06) வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.
இவ்வாறு நுவரெலியாவில் இருந்து ரகலை பயணித்த வான் புரூக்சைட் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தெடர்பன மேலதிக விசாரணைகளை ரகலை பொலிஸ் அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.