பிரான்ஸில் செம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
கலவரத்துடன் தொடர்புடைய 560 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
செம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்று(01.05.2025) நடைபெற்ற நிலையில், அதில் பாரிஸ் செயின்ட்- ஜெர்மன்(PSG) அணி வெற்றியீட்டியது.
இதனையடுத்து, பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்ற கொண்டாட்டங்களின் போது, ஏற்பட்ட முருகல்களில் கலவரம் வெடித்தது.
இதில் 192 பேர் காயமடைந்ததாகவும், 264 வாகனங்கள் உட்பட 692 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கலவரம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிரான்ஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.