தெற்கு ஸ்பெயினில் உள்ள ஒரு மதுபான விடுதி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பிரித்தானியர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஸ்பெயினின் கோஸ்டா டெல் சோல் பகுதியில் அமைந்துள்ள பிரபலமான ரிசார்ட் நகரமான ஃபுயென்கிரோலாவில், ஒரு மதுபான விடுதிக்கு வெளியே நடந்த மோசமான தாக்குதலில், முகமூடி அணிந்த துப்பாக்கிதாரியால் இரண்டு பிரித்தானியாின் ஸ்காட்டிஷ் தீவினை சேர்ந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் மேலும் ஒரு நபர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முகமூடி அணிந்த தாக்குதல்தாரிகள் ஒரு வாகனத்தில் வந்துள்ளனர், அவர்களில் ஒருவர் வெளியே வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், துப்பாக்கிதாரி "சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார் என்றும், தற்போது தீவிர பொலிஸ் தேடுதல் வேட்டையில் இருப்பதாகவும் மாலகா அரசியல்வாதி பிரான்சிஸ்கோ ஜேவியர் சலாஸ் உறுதிப்படுத்தினார். இந்த இரட்டை கொலை தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.