அநுர ஆட்சியிலும் தமிழர் நிலங்களில் புத்தனின் ஆக்கிரமிப்பு-வெடித்து சிதறிய நவஜோதி..!

 

பௌத்தமயமாக்கலானது இந்த ஆட்சியில் தொடர்கிறது எனவும் தமிழர்களின் பாரம்பரியத்தில் புத்தர் சிலை நிறுவப்படுவதை ஏற்க முடியாது எனவும் கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் பொருளாளர் தட்சணா மூர்த்தி நவஜோதி தெரிவித்தார்.



திருகோணமலையில் நேற்று (01)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 5 ஆட்சியாளர்கள் மாறிப்போயிருந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை பொளத்தமயமாக்கலையே எமது தாயகத்தில் செய்து கொண்டிருக்கின்றார்கள். 

அந்தவகையில் வெருகல் பிரதேசத்தில கிராமத்திர் கல்லடி முருகன் ஆலயத்தில பௌத்த மதத்தை நிறவும் நோக்குடன் புத்தர் சிலையை வைத்திருந்தார்கள்.

மூதூர் பிரதேசத்தில 64ம் கட்டையில மலைப்பகுதியில ஒரு புத்தர் சிலையை வைத்திருந்தார்கள் பல இடங்களில் வைக்கப்டுகிறது

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதுதான் எங்களது வாழ்வியல் . ஆனால் இன்று குன்று இருக்கும் இடமெல்லாம் புத்தர் சிலையை நிறுவுகின்ற நிலை காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 

அநுரவின் ஆட்சியிலும் தொடர்கிறது. இவர் ஆட்சிக்கு வரும்போது இப்பிடியான பிரச்சனைகள் இடம்பெறாது என வாக்கு தந்த போதிலும் தொடர்கிறது 

மேலும்  உங்களுடைய மதத்தை பரப்புவதற்காக எங்களுடைய நிலத்தை அபகரிக்கின்றீர்களா? அல்லது எங்களுடைய காணிகளை அபகரிகப்பதற்காக இதைச்செய்கிறீர்களா, என கேள்வியெழுப்பியுள்ளார். 


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post