வீடொன்றில் நேர்ந்த பயங்கரம்-ஒருவர் பலி-பலர் கவலைக்கிடம்..!

 

அமெரிக்காவின் மேற்கு வட கரோலினாவில் வீடு ஒன்றில் இடம்பெற்ற விருந்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு குறைந்தது 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிக்கோரி நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12:45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்தது.

பாதிக்கப்பட்ட 12 பேரில் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் அல்லது வயதுகளை இன்னும் பொலிஸார் வெளியிடவில்லை.