பொரெல்ல அடுக்குமாடி குடியிருப்பில்இருந்து விழுந்து இளைஞர் பலி: போதைப்பொருள் பாவனை காரணமா என சந்தேகம்!
கொழும்பு பொரெல்ல, மெத்சர உயன வீட்டுத் தொகுதியின் உச்ச மாடியில் இருந்து இன்று காலை கீழே விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பொரெல்ல பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையாகியிருந்தது தெரியவந்துள்ளது. அவரது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் பாவனைக்கும் இந்த விபத்துக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.