புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அம்புலன்ஸ் பற்றாக்குறையால் பல பிரச்சினைகள் தொடர்ந்து காணப்பட்டு வருவதோடு நோயாளிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில் நேற்றையதினம் (11) பாடசாலை மாணவி ஒருவர் தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் போன்ற நோயால் வைத்தியசாலையில் பீடிக்கப்பட்ட நிலையில் அனுமதித்த போது மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாமல் வைத்தியசாலை நிர்வாகம் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை உடையார் கட்டு மத்திய கல்லூரிக்கு கல்வி கற்க சென்ற குறித்த மாணவி உடல்நலக் குறைவால் பாடசாலையில் இருந்து காலை பெற்றோரிடம் பாடசாலை நிர்வாகத்தினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஒப்படைக்கப்பட்ட மாணவியுடன் பெற்றோர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக பாடசாலை மாணவி மாஞ்சோலை வைத்தியசாலைக்கு அனுமதிக்க வேண்டிய தேவை காணப்பட்டதுடன் மாஞ்சோலை வைத்தியசாலைக்கு புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் இருந்து கொண்டு செல்வதற்கு அம்புலன்ஸ் தேவைப்பட்டதன் காரணத்தால் மாணவியும், பெற்றோரும் காத்திருந்துள்ளனர்.
சுமார் 3 மணிநேரத்தின் பின் மாணவியின் தந்தை வைத்தியசாலை வைத்தியரிடம் சென்று தாம் காத்திருப்பதற்கான காரணத்தை கேட்ட போது வைத்தியர் வைத்தியசாலையில் அம்புலன்ஸ் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அதற்கு அவர் தன் சொந்த செலவில் அம்புலன்ஸ் விட வேண்டும் என மாணவியின் தந்தையிடம் முரண்பாடாக பேசியுள்ளார்.
இதன் பின் மாணவியின் தந்தை தனது சொந்த விருப்பின் பெயரில் வைத்தியசாலையில் இருந்து மாணவியை மாஞ்சோலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
மாஞ்சோலை வைத்தியசாலையில் பல அம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

