மன்னார் நகர மத்தியில் உள்ள தந்தை செல்வா உருவச் சிலையின் தலை உடைத்து வீசப்பட்டிருக்கிறது.
நேற்று மன்னாரின் பிரதான சபைகள் அமைக்கப்பட்டு அது தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கிறது.
ஆளுக்கொரு திசையில் ஓடும் தமிழ்த் தேசியக் கட்சிகளைப் பார்த்து கண்ணீர் மல்க சிரிப்பது போலிருக்கிறது வீழ்ந்து கிடக்கும் தந்தை செல்வாவின் தலைப்பகுதி.
உடைக்க எத்தனித்தது தந்தை செல்வாவின் தலையை அல்ல. தமிழ்த் தேசிய சிந்தனையை என ஆர்வலர்கள் குறிப்பிடுகிறார்கள்