தெஹிவளையில் திடீரென தீப்பற்றி எரிந்த டிப்பர் வண்டி……!!

 

தெஹிவளை – ஹில் வீதியில் பயணித்து கொண்டிருந்த டிப்பர் வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த தீ விபத்து நேற்று திங்கட்கிழமை  மாலை இடம்பெற்றுள்ளது. 


தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எவ்வாறிருப்பினும், தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.