மாத்தறை, திக்வெலை பிரதேசத்தில் நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் ஹயஸ் வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி இருவரும் படுகாயங்களுடன் திக்வெலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
திக்வெலையைச் சேர்ந்த 33 வயதுடைய நபரும், கம்புறுபிட்டியவைச் சேர்ந்த 49 வயதுடைய நபரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இருவரும் மரக்கறி வியாபாரிகள் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஹயஸ் வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.