திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைக்காட்டி புதூர், ஜெயம் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கவின் குமார்.
இவரது மனைவி ரித்தன்யா (வயது 24). இவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன் (மார்ச் 2025) திருமணம் நடந்தது. ஆனால், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரித்தன்யா, அவிநாசியில் இருந்து காரை ஓட்டி வந்து, மொண்டிப்பாளையம் அருகே செட்டி புதூரில், காருக்குள் விஷ மாத்திரை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சேவூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து, ரித்தன்யாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
திருமணமாகி 78 நாட்களே ஆனதால், கோட்டாட்சியர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.