புத்தளம்- கல்பிட்டியில் உறவினரின் திருமண வீட்டுக்கு சென்று திரும்பும்போது,நேற்று இரவு 1:30 மணியளவில், மன்னார் - ஆன்டியா புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் நாச்சிக்குடாவைச் சேர்ந்த அஸீஸ் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவரின் உடலம் செட்டிகுளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு,
காரில் சென்ற ஏனையோர் காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை,செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.