காரைநகர் J/40 கிராம பிரிவின் அலுவலகத்திற்கு முன்பாக கிராம அலுவலரை காண்பதற்காக நீண்ட நேரமாக வீதி ஒரமாக ஒரு மூதாட்டி அடிக்கிற வெயிலிலும் தனது ஏதோ ஒரு தேவையை பூர்த்தி செய்ய காத்திருக்கிறார்.
9.15 கடந்த நிலையிலும் கிராம அலுவலகர் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் அந்த மூதாட்டி வீதியோரத்தில் ஒரு கல்லை போட்டு இன்னும் காத்திருக்கிறார்.
இன்னும் கிராம அலுவலகர் வரவில்லையா என live lk ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போது அந்த மூதாட்டியின் கேள்விகள் பின்வருமாறு அமைகின்றன..!
அரச அலுவகர்கள் ஏன் ஒழுக்கமற்று இருக்கிறார்கள்..?
வயது முதிர்ந்த காலத்தில் இத்தனை நேரமாக இந்த வெயிலில் வீதி ஒரமாக காத்திருக்கிறேன்.
அல்லது குறிப்பிட்ட கிராமபிரிவில் இத்தனை மணியில் இருந்து இத்தனை மணிவரை மக்கள் அலுவல்களை பூர்த்தி செய்ய கிராம அலவலகர் இருப்பதை எம்மை போன்றவர்களுக்கு உறுதி செய்யவேண்டும்.
தங்கள் வீடுகள் போல் அல்லவா வந்து செல்கிறார்கள்.
அந்த காலத்தில் விதானைமார் எங்கள் விடுகளுக்கு வந்தே எங்கள் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்த நல்ல விதானைமார் இருந்தவை என்டு அந்த பாட்டி ஆதங்கத்தோடு தெரிவிக்கிறார்கள்.
ஒரு நிர்வாக ஒழுக்கம் என்பது குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடம் முன்பாகாவே அலுவலகம் திறக்கப்படல் வேண்டும்
கிராம அலுவலகர் வந்திருக்க வேண்டும்
விடு முறை நாட்கள் மற்றும் அலுவலக நேரம்-மக்கள் சந்திப்பு அனைத்தும் அட்டவணை போட்டு மக்கள் பார்வைக்காக வைத்திருத்தல் வேண்டும்.
சில அரச அதிகாரிகளால் நல்லவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
அரச சேவை என்பது மக்களுக்கான சேவை-உங்கள் சுய நல சேவை அல்ல.
எத்தனை படித்திருந்தாலும் ஒழுக்கம் அற்ற அரச அதிகாரிகள் சாக்கடைக்கே ஒப்பானவர்கள்.
காரைநகர் புதிய பிரதேச சபையினர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மூதாட்டி மனவருத்ததுடன் தெரிவித்து கொள்கிறார்.
நடவடிக்கை எடுக்குமா காரைநகர் புதிய பிரதேச சபையினர்
பார்க்கலாம் live lk செய்திகளுக்காக ஈழம் மயூ.