லண்டன் சௌதால் பகுதியில் மனைவியைக் கொலை செய்ய முற்பட்ட கணவன் பொலிசாரா்ல கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த 35 வயதான தனது மனைவியான அகல்யாவைக் கட்டி வைத்து நச்சு திரவத்தை ஊசியில் ஏற்றியுள்ளார்.
ஜெகதீஸ்வரன். அதன் பின் மயங்கிய மனைவியை இறந்ததாக கருதி வீட்டு படுக்கையில் விட்டுவிட்டு வழமையாக வேலைக்கு செல்வது போல் சென்றுள்ளார்.
ஜெகதீஸ்வரன். கணவன் சென்ற பின் மயக்கம் தெளிந்து எழுந்த அகல்யா தொலைபேசியில் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிசார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தனது மனைவி ஆபிக்க இளைஞன் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருப்பதாகவும் அதனை பலதடவைகள் தான் சுட்டிக் காட்டியும் மனைவி கேட்காததால் மனைவியை தாக்கியதுடன் மனைவிக்கு அதிர்ச்சியளிப்பதற்காக சாதாரண வெற்று ஊசிக்குள் நீரை எடுத்து அவளது உடலில் செலுத்தியதாகவும் பொலிசாரிடம் கணவன் கூறியுள்ளார்.
மாணவர் விசாவில் 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த 35 வயதான ஜெகதீஸ்வரன் ஏற்கனவே அங்கு மாணவர் விசாவில் சென்று கற்று வந்த அகல்யாவை காதலித்து திருமணம் முடித்து வாழ்ந்து வந்ததாகத் தெரியவருகின்றது.
தற்போது அவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்,