பிரித்தானியாவின் லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தின் விவரம்:
லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து நோக்கி கிளம்பிய 'பீச் பி200' (Beech B200) என்ற 40 அடி நீளமுள்ள சிறிய ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஓடுபாதையில் இருந்து சுமார் 175 அடி உயரத்தில் வெடித்து விபத்துக்குள்ளானது. இதனால் வானத்தில் ஒரு கருப்பு புகை மூட்டம் எழும்பியது. இதுதொடர்பான காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
12 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய இந்த விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர் என்பது குறித்த தகவல் உடனடியாகத் தெரியவரவில்லை.
அவசர சேவை நடவடிக்கைகள்:
விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், எசெக்ஸ் பொலிஸார், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு இயந்திரங்கள் அனைத்தும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த விபத்து குறித்து எசெக்ஸ் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், "சவுத்எண்ட் விமான நிலையத்தில் ஒரு கடுமையான சம்பவம் நடந்த இடத்தில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம். 12 மீற்றர் விமானம் மோதியதாக மாலை 4 மணிக்குச் சற்று முன்பு எங்களுக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் உள்ள அனைத்து அவசர சேவைகளுடனும் நாங்கள் இப்போது பணியாற்றி வருகிறோம். மேலும், பல மணிநேரம் அந்தப் பணி தொடரும். இந்தப் பணி தொடரும் வரை, முடிந்தவரை இந்தப் பகுதியைத் தவிர்க்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறோம்," எனத் தெரிவித்தனர்.
ஃப்ளைட்ராடர்' (Flightradar) தகவல்படி, விமானம் வடகிழக்கு திசையில் சுமார் 120 மைல் வேகத்தில் புறப்பட்டு, சுமார் 175 அடி உயரத்தை எட்டியதாகத் தெரிகிறது. ஆனால் தரையை விட்டு வெளியேறி, வடக்கு நோக்கித் திரும்பிய பிறகு வேகம் குறைந்ததாகத் தரவு குறிப்பிடுகிறது.
காணொளியை காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்