
நேற்று இரவு வேளையில் திருடர்கள் மாடுகளை வாகனத்தில் ஏற்றுவதாக எமக்குக் கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மூன்று திருடர்களை பிடித்து அருகில் உள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதன் பின்னர் உடனடியாக பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
திருடர்கள் மூவரும் புல்மோட்டையைச் சேர்ந்த அசீஸ் அப்துல்லா, கொம்ராங்கடவல பொலிஸ் நிலையத்தில் ஓட்டுநராக கடமையாற்றும் அலி அக்பர்,குஞ்சு முகமது அஸ்கர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
