கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டு பெண்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று திங்கட்கிழமை (14) இரவு 09.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 25 முதல் 39 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களில் 06 பேர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், 03 பேர் வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் சீன நாட்டைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவர்கள் சுற்றுலா விசாக்களின் மூலம் நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், தற்போது அவர்களில் நான்கு பேரின் சுற்றுலா விசாக்கள் காலாவதியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தற்போது வெலிசறை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, விரைவில் அவர்களது நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.