Zee tamil சரிகம போட்டியில் யாழ்பாணத்தை சேர்ந்த கில்மிஷா வெற்றி பெற்றது யாவரும் அறிந்தது.
அந்த வகையில் ஈழத்திலும் புலத்திலும் பல இசைக்கச்சேரிகளில் மேடை ஏறி இசைத்திறமையை நிரூபித்து வருகிறார் கில்மிஷா.
தற்போது zee tamil சரிகமப இசை நிகழ்ச்சி சீசன் 5 நடை பெற்று வருகிறது.
இதில் ஈழத்தை சேர்ந்த இரு போட்டியாளார்கள் தமது இசைத்திறமையை நிரூபித்து வருகிறார்கள்.
தற்போது அடுத்தவாரம் வரும் சரிகமப இசைச்சுற்றுக்கு zee tamil கில்மிஷாவை அழைத்திருப்பதாக தெரியவருகிறது.
சற்று முன் தனது தாயாருடன் கில்மிஷா பலாலி விமான நிலையம் ஊடாக தமிழகம் புறப்பட்டார்.
இந்த வாரம் கில்மிஷாவின் பாடலும் zee tamil இல் ஒலிக்கலாம் என ரசிகர்கள் தெரிவிக்கிறார்கள்.