வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!

 

வெள்ளிக்கிழமை, 11 ஜூலை 2025
மேஷம்
aries-mesham
உடன்பிறப்புகளால் அதிக உதவி உண்டு. கோவில், குளம் பணிகளில் ஈடுபடுவீர்கள். அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். சுற்றுலாப் பயணங்கள் சென்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
ரிஷபம்
taurus-rishibum
வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் அனுகூலமான சூழல் நிலவும். வீட்டில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
மிதுனம்
gemini-mithunum
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள் வாங்குவீர்கள்., சாஸ்திர ஆராய்ச்சியும், அதில் தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும்.
கன்னி
virgo-kanni
தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சியைக் கைவிடாது தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றி துணிவுடன் செயல்களில் இறங்குங்கள்.
மகரம்
capricorn-magaram
பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவைக் குறைக்க, புதிய பொருட்களை தேவைப்பட்டால் மட்டும் வாங்கவும். மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
கடகம்
cancer-kadagam
தனவரவு அதிகரிக்கும். எதிரிகள் அடி பணிவர். ஆரோக்கியம் மேம்படும். பயண சுகம் ஏற்படும். தனக்கெனத் தனி வீடு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள் குதுகலமாய் நிறைவேறும்.
சிம்மம்
leo-simmam
சுமாரான நாள். உங்கள் திறமைகள் அனைத்தையும் வெளிக்காட்டி வேலை செய்தாலும் ஏளனமே மிஞ்சும். பயணங்களின் போது விபத்து நேராவண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
துலாம்
libra-thulam
அனைத்துச் செயல்களிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். உல்லாசமான சுற்றுலாப் பயணங்கள் ஆகியவை ஏற்படும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை கூடும்.
மீனம்
pisces-meenam
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். துணிவுடன் செயல்களில் இறங்குங்கள்.
தனுசு
sagittarius-thanusu
இன்று, குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும். தொழில் வளம் பெருகும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் கலகத்தால், உறவுகளுக்குள் பகை ஏற்படும். அக்கம் பக்கத்தினருடன் அளவாகப் பழகுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
கும்பம்
aquarius-kumbam
கௌரவக் குறைவு ஏற்படாவண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை. துன்பம் வந்த போதினிலும் சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post