தமிழாக்கம் 👇
இத்தீவுக்கு நிகழவிருந்த அத்தனை ஆக்கிரமிப்புக்களையும் மூன்று தசாப்தகாலம் தள்ளிப்போட்டவர் நீங்கள்.
நீங்கள் மெளனித்து ஒரு தசாப்தத்தைக்கூட சுயமாக எதிர்கொள்ளமுடியவில்லை இத்தீவாரால்.
எனவே
நீங்களே இத்தீவிற்கு சுதந்திரமளித்த காவலன்.
நீங்களே தீவின் எக்கரையும் காத்துநின்ற கடற்தேவன்.
நீங்களே எல்லா எல்லைகளும் காத்துநின்ற எல்லைத்தெய்வம்.
உங்கள் இருப்பு தமிழ் தேசியத்தை மட்டுமல்ல சிங்கள தேசியத்தையும் சேர்த்தே பாதுகாத்தது.
இது தனி ஒருவரின் கவிதை தான்!
ஆனால் இது சுமந்த உணர்வுகள் தனி ஒருவரது அல்ல.
பெரும்பாலான சிங்கள மக்களின் மனநிலை தற்போது இதுதான்.
ஊடகங்கள் இல்லாத காலத்தில் இவர்கள் காட்டியதை நம்பியவர்கள் இன்று இவர்களினமே அவர்களால் சோரம் போனதை உணர்கிறார்கள்.
ஓம்! எங்கள் கடவுள் இருந்தவரை நிலம், நீர், ஆகாயம் எல்லாம் கற்போடு இருந்தது.
எல்லைகளுக்கு எங்கள் கருப்பசாமி அவரே!
கடல்கூட எல்லைக்குள் ஆர்ப்பரித்தது அவராட்சியில்!
இருந்தால் தலைவன்! இறந்தால் இறைவன்!
எங்கள் கரிகா[வ]லன்!