யாழ் காரைநகர் கருங்காலியை அன்மித்த பகுதியில் சிறிய அளவிலான வைரவர் கோவில் ஒன்று அமையப்பெற்றுள்ளது. வழமை போல் கோவிலை சுத்தம் செய்ய சென்ற பக்தர் ஒருவர் எதேர்ச்சையாக கோவில் தலைவிருட்சத்தில் அருகில் ஒரு கருநிற நாகம் ஒன்று தன்னை பார்ப்பது போன்று உணர்ந்தார். தைரியத்தை வரவழைத்து மிகவும் அருகில் சென்று பார்த்தபோது தான் பெரு மூச்சு நீண்டது. ஓம் கரிய நாகம் போல் கோவில் தலை விருட்சத்தில் வளர்ந்திருந்தது அந்த அரியவகை களான். அருகில் சென்று உற்று அவதானித்தால் மட்டுமே அது களான் என்று புரியும். அச்சு அசல் கரு நாகம் போல் தலையையும் உடலமைப்பையும் கொண்ட இந்த நிகழ்வு காரைவாழ் மக்களிடம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் காட்டு தீ.போல் ஊர் எங்கும் பரவியது-பக்தர்கள் பார்வையிட படையெடுத்த வண்ணம் உள்ளனர். பிரபஞ்ச ரகசியங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டவை-இயற்கை வினோதங்களை நிகழ்த்திய வண்ணமே இருக்கிறது.