வவுனியா மன்னார் பிரதான வீதியில் புகையிரத்துடன் பட்டா வாகனம் மோதி விபத்து. பட்டாவை செலுத்திவந்த தந்தை இரண்டு பிள்ளைகளையும் பட்டாவுக்குள் விட்டு விட்டு பாய்ந்து தப்பினார் பிள்ளைகளுக்கு காயம். கொழும்பில் இருந்து யாழ் சென்று கொண்டிருந்த ரயிலே விபத்தில் சிக்கியது வவுனியா மன்னார் ரோட்டில் அமைந்திருக்கும் ரயில்வே கதவை. மூடாததால் விபத்து. ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்கு காரணம். கதவை மூடும் பணியாளர். கதவை மூடி திறக்கும் அறையில் அவர் இருக்கவில்லை என்று பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பட்டா என்னும் வாகனத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட தகப்பனாரும் பயணித்துள்ளார். அந்த சமயத்தில் ரயில் வருவதைக் கண்டு தகப்பனார் வாகனத்தை விட்டு பாய்ந்து உள்ளார் இரண்டு குழந்தைகளும் கடும் காயங்களுக்கு உட்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்