யாழ்ப்பாணத்தில் மட்டும் கஞ்சா, ‘ஹேரோயின்’, ‘ஐஸ்’ உட்பட்ட போதைப் பொருள் அடிமைகள் கிட்டத்தட்ட 4500 ற்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றார்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்து வரும் கணிப்பீடுகளை வைத்து அறிய முடிகின்றது.இந்த போதைப் பொருள் பாவனையாளர்களில் 15 வீதத்திற்கும் மேற்பட்டவர்கள் யாழ், நல்லுார் பிரதேச செயலக பிரிவுகளில் வாழ்கின்றார்கள் என அறிய முடிகின்றது. யாழில் இவர்களுக்கு இவ்வாறான போதைப் பொருட்களை விநியோகிப்பவர்கள் குழுக்களாக செயற்படுகின்றார்கள். இவர்களில் 5 குழுக்களை உள்ளடக்கிய சுமார் 60ற்கும் மேற்பட்டவர்கள் மிக முக்கிய போதைப் பொருள் விநியோகத்தர்களாக உள்ளார்கள். யாழில் பிரபல வர்த்தகர்கள் என்ற போர்வையில் இயங்கும் முக்கிய வர்த்தகர்கள் 4 பேர் (இன்னும் இவர்களை கையும் மெய்யுமாக பிடிக்க முடியாதுள்ளதாலும் இவர்களின் பெயர்களை குறிப்பிட்டு கூறினால் ‘அலேட்’ ஆகிவிடுவார்கள் என்பதாலும் இவர்களை பற்றிய விபரங்களை தவிர்த்துள்ளோம்.) இந்த வலையமைப்புக்களில், ஒரு சில வலையமைப்புக்களின் பிரதான சூத்திரதாரிகளாக உள்ளார்கள் என எம்மால் அறிய முடிந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கஞ்சா மட்டுமே கடல்வழியாக வரவழைக்கப்படுகின்றது. ஏனைய பெறுமதி கூடிய போதைப் பொருட்கள் தென்பகுதியிலிருந்து கொண்டுவரப்படுகின்றது. வெளிநாடுகளிலிருந்து ‘பார்சல்’ வழியாக மிகச் சிறிய அளவு பெறுமதி கூடிய போதைப் பொருட்கள் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் மிக முக்கிய அரசாங்க அதிகாரியின் மகன், யாழ்ப்பாணத்தின் முக்கிய பெண்கள் பாடசாலை பிரதி அதிபரின் மகனான பிரபல பாடசாலை மாணவன் (இவரைப் பொலிசார் கைது செய்தனர்) உட்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரபல சட்டத்தரணி (இவர் தொடர்பான விரிவான தகவல்களை பின்னர் தருகின்றோம்), பெண்கள் அமைப்பு ஒன்றின் முக்கிய பொறுப்பாளராக இருக்கும் குடும்பப் பெண் மற்றும் பணக்கார யுவதிகள், கணவனால் போதைப் பொருள் பாவனைக்கு உட்பட்ட இளம் குடும்பப் பெண்கள் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் (இவர்கள் வீடுகளை வாடகைக்கு எடுத்து குழுவாகவே போதைப் பொருள் நுகரும் பழக்கம் உடையவர்கள்), பிரபல வர்த்தகர்கள் என உயர்தரமானவர்களிலிருந்து கழிவுகள் அகற்றும் பணியாளர்கள் வரை போதைப் பொருள் ஊடுருவி உள்ளது. அத்துடன் பிரபல யாழ் அரசியல்வாதி ஒருவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதுடன் அவரது பிரதான ஆதரவாளர்களும் இந்த வர்த்தகர்த்துடன் தொடர்பில் உள்ளார்கள். குறித்த அரசியல்வாதியுடன் இரவில் மனைவி படுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர் இரவில் மாத்திரம் போதை ஊசி போடுவாராம்.. போட்டுவிட்டு மனைவியை வாயால் கடித்துக் குதறுவதால் மனைவி இரவில் அவருடன் தங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு குறித்த அரசியல்வாதி கடித்துக் குதறியதில் தொடைகள், மார்புகள், மற்றும் பிட்டப்பகுதிகளில் கடிகாயங்களுக்கு உள்ளாகி பிரபல வைத்தியரிடம் மனைவி சிகிச்சை பெற்றுள்ளார். ”அவர் இப்படி செய்யும் போது நீங்கள் தள்ளிவிட்டு ஓடியிருக்கலாமே” என வைத்தியர் அரசியல்வாதியின் மனைவியைக் கேட்ட போது தன்னை புதுமையான உறவுக்கு உட்படுத்துவதாக கூறி கைகள், கால்களை கட்டிலுடன் கட்டி வைத்துவிட்டே கடித்துக் குதறியதாகவும் ‘ஏசி’ அறையாக இருந்ததால் தனது கதறல் வெளியில் கேட்கவில்லை எனவும் வைத்தியரிடம் மனைவி அழுதழு கூறினார் என குறித்த வைத்தியர் தன்னுடன் நெருக்கமான ஊடகவியலாளரிடம் கூறியிருந்தார். குறித்த அரசியல்வாதியை விட்டு சில மாதங்கள் பிரிந்திருந்த மனைவி அரசியல்வாதியின் தந்தை மற்றும் உறவுகளின் கெஞ்சல்களால் மீண்டும் இணைந்து வாழ்கின்றார். ஆனால் இரவில் அவருடன் படுப்பதில்லையாம். கஞ்சா தவிர்ந்த பெறுமதி கூடிய போதைப் பொருளை இலங்கையில் விநியோகிக்கும் அதி உயர் போதைப்பொருள் வியாபாரிகளின் முக்கிய இலக்கு யாழ்ப்பாணமாகும். கொழும்புக்கு, கண்டிக்கு அடுத்ததாக யாழ்ப்பாணத்திலேயே அதி உயர் பணப்புழக்கம் இருக்கின்றது என அவர்கள் எண்ணுகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் அவர்களால் விநியோகிக்கப்படும் போதைப் பொருளின் அளவு, யாழ்ப்பாணப் பணப்புழக்கத்துடன் ஒப்பிடும் போது, மிகக் குறைவானது என அவர்கள் கருதுகின்றார்கள். அதன் காரணமாக போதைப்பொருள் நுகர்வை அதிகரிக்க திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றார்கள். கடந்த வருடம் யாழ் கொக்குவில் இரயில் நிலையத்திற்கு அருகில், ரெயிலில் குதித்து 22 வயதான போதைப் பொருள் விற்பனை செய்துவந்த இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாள். அவளை தடுக்க முற்பட்ட அவளது தந்தையும் கடும் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. குறித்த பெண் தற்கொலை செய்தது எதனால் என்பது பலருக்கு தெரியாது. அவளது செத்த வீட்டுக்கு யாழ்ப்பாணத்திற்கு ‘ஐஸ்’ போதைப்பொருள் விற்கும் தென்பகுதி முக்கியஸ்தர் (பல பிடியாணைகள் உள்ள) வந்துள்ளதாக தகவல்கள் கொடுத்தும் பொலிசார் அவனை கைது செய்வதை தவற விட்டிருந்தனர்.
