சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, சுப்பிரமணியபுரம் நான்காவது வீதியைச் சேர்ந்த சாமி ஐயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த 30 ஆண்டுகளாக கத்தாரில் பணிபுரிந்து வருபவர்.
ஆண்டுக்கு ஐந்து முறை சொந்த ஊருக்கு வந்து உறவினர்களைச் சந்தித்து செல்வது இவரது வழக்கம். இவரது மனைவி பூர்ணிமா மற்றும் இரு குழந்தைகளுடன் காரைக்குடியில் வசித்து வருகிறார்
ஆனால், இந்த குடும்பத்தைச் சுற்றி நடந்த சம்பவங்கள் தற்போது கிரைம் த்ரில்லர் கதையை மிஞ்சும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்ட்-1: மனைவியின் கள்ள உறவு ஆடியோக்கள் அம்பலம்
சாமி ஐயா, தனது மனைவி பூர்ணிமாவுக்கும், திமுக பிரமுகர் சதீஷுக்கும் திருமணத்தைத் தாண்டிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டினார்.
மனைவியின் செல்போனில் ஒட்டுக்கேட்பு ஆப் மூலம் பதிவான ஆபாச உரையாடல்களை ஆதாரமாக வெளியிட்டு, சதீஷை மகன் போல நினைத்து வீட்டுக்கு அனுமதித்தது தவறு என வேதனைப்பட்டார்.
மகனுடன் தாய் செய்யும் வேலையா இது.? என நொந்து போனதாக கூறினார். இந்த ஆடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கடந்த ஒரு வாரத்துக்கு முன் கத்தாரிலிருந்து காரைக்குடிக்கு வந்த சாமி ஐயா, ஆவுடையார் கோவிலில் தனது தாயைப் பார்க்கச் சென்று திரும்பும்போது, சதீஷ் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினரால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தென்கரை பகுதியில் காரை வழிமறித்து, கடத்திச் சென்று ஒரு மைதானத்தில் மனைவி மற்றும் மகன் முன்னிலையில் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், இதற்கு மனைவியின் கள்ள உறவே காரணம் எனவும் சாமி ஐயா கூறினார். இதையடுத்து, சாக்கோட்டை காவல்துறையினர் சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாமி ஐயா, தனது 30 ஆண்டு உழைப்பில் சேர்த்த 6-7 கோடி மதிப்பிலான சொத்து, 350 பவுன் நகை, கார், பைக் உள்ளிட்டவை மனைவியிடம் இருப்பதாகவும், இவை அனைத்தையும் சதீஷுக்கு மாற்றியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், 35 லட்சம் மதிப்பிலான இடத்தை வாங்குவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதாகவும் புகார் கூறினார்.
பார்ட்-2: கணவரின் கள்ள உறவு அம்பலம்
இந்நிலையில், பார்ட்-2வில் புதிய திருப்பமாக சாமி ஐயாவின் மனைவி பூர்ணிமா அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் செப்டம்பர் 8, 2025 அன்று அளிக்கப்பட்ட புகாரில், சாமி ஐயாவுக்கு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கௌதமி என்பவருடன் 2019 முதல் தகாத உறவு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கௌதமி திருமணமானவர் மற்றும் ஒரு குழந்தை உள்ளவர்.
ஆனால், சாமி ஐயாவின் மோகத்தால் கௌதமியின் கணவரை விரட்டிவிட்டு, அவரை கத்தாருக்கு அழைத்துச் சென்று தனி வீடு எடுத்து வாழ்ந்ததாகவும், இதன் விளைவாக கௌதமி கர்ப்பமாகி, காரைக்குடி தனியார் மருத்துவமனையில் (ராகவகுமார் மருத்துவமனை) பெண் குழந்தை பிறந்ததாகவும் பூர்ணிமா கூறியுள்ளார்.
பூர்ணிமாவின் புகாரின்படி, சாமி ஐயா தனது 23 வயது மகள் மற்றும் 17 வயது மகனின் படிப்புச் செலவு, குடும்ப செலவுகளுக்கு பணம் அனுப்பாமல், கௌதமியுடன் மட்டுமே நெருக்கமாக இருந்ததாகவும், தனது தங்கை மகன் பிரசாதுடன் மருத்துவமனைக்கு சென்றபோது, சாமி ஐயா தன்னை ஆபாசமாகப் பேசி, நெஞ்சில் ஏறி மிதித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கௌதமியும், “இவளை கொன்றால்தான் நாம் வாழ முடியும்” என மிரட்டியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
கணவரின் மறுப்பு
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த சாமி ஐயா, மருத்துவமனையில் தனது மனைவியை தாக்கவில்லை என மறுத்தார். ஆனால், கௌதமிக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்து மழுப்பலான பதில்களையே அளித்தார்.
மனைவியின் அந்தரங்க ஆடியோக்களை அம்பலப்படுத்தியது நம்பிக்கை துரோகத்திற்கு எதிரான நடவடிக்கை என்றாலும், தானும் இதேபோல் தகாத உறவில் ஈடுபட்டதாக வெளியான புகார், அவரை “உலக மகா உத்தம கணவர்” என்று காட்டிக்கொண்டவரின் முகமூடியை கிழித்துள்ளது.
கேள்விக்குறியான குடும்பம்
சாமி ஐயாவின் மகன் மற்றும் மகள், தங்கள் தாயின் தவறுகளையும், தந்தையை கூலிப்படையை ஏவி தாக்கியதையும் எதிர்க்காமல் இருந்தது ஏற்கனவே கேள்விக்குறியாக இருந்தது.
தற்போது, தந்தையின் கள்ள உறவு மற்றும் மனைவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த புகார்கள், இந்த குடும்பத்தின் உறவுகளில் உள்ள சிக்கல்களை மேலும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் பார்ட்-3 இன்னும் என்ன திருப்பங்களைக் கொண்டு வரப்போகிறது என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று. சாமி ஐயாவின் சொத்து, நகை, மற்றும் குடும்ப உறவுகளைச் சுற்றிய இந்த சர்ச்சை, காரைக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த விவகாரத்தில் மேலும் தெளிவை ஏற்படுத்துமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.