பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு நோக்கி செல்லும் பொரளை தேவி பாலிகா சுற்றுவட்டத்தில் இருந்து டி.எஸ். சேனாநாயக்க சந்தி வரையான வீதிகள் திங்கட்கிழமை (01) இரவு 7:00 மணி முதல் மூடப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொரளையில் அண்மையில் வீதி தாழிறங்கியதால் அதன் பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.