இன்று காலை சீனாவின் குவாங்டாங், யாங்ஜியாங் ஆகிய இடங்களைத் தாக்கிய சூறாவளி மாட்மோவால் பெரிய அலைகள் ஏற்பட்டு வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஜான்ஜியாங், மாமிங் மற்றும் யாங்ஜியாங் பகுதிகளிலிருந்து வெளியேற அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர். 150,000க்கும் மேற்பட்டோர் அப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.



