அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் (2026) உள்ளடக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள அதிகரிப்பின் அடுத்த கட்டத்தை இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை முற்றாக நீக்குவதற்காக துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சித் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். நிதி அமைச்சராக செயற்படும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம், அதன் இரண்டாம் வாசிப்புக்காக, எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
