பாபா வாங்க கணிப்புப்படி, ஆண்டின் கடைசி மாதங்களில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

 



 எதிர்காலத்தைக் கணித்து கூறும் தீர்க்கத்தரசிகளில் மிகவும் பிரபலமான பாபா வாங்காவின் பல கணிப்புகள் நிஜமாகியுள்ளன.


அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் பல திடுக்கிடும் கணிப்புக்களை பாபா வாங்கா கணித்துள்ளார். அதில் சில நடந்தேறியும் உள்ளன. இந்த 2025 ஆம் ஆண்டு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ளன. இந்த 3 மாதங்கள் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கலாம் என்று பாபா வாங்கா கணித்துள்ளார். அந்த வகையில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.


ரிஷபம் பாபா வாங்காவின் கூற்றுப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இம்மாதங்களில் சூரியனின் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு நல்ல செய்தியை பெறுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் இக்காலத்தில் வெற்றியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். மிதுனம் பாபா வாங்காவின் கூற்றுப்படி, மிதுன ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மறக்க முடியாத அளவில் முன்னேற்றத்தைத் தரப் போகிறது. குரு பகவானின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. நீண்ட காலமா நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், வெற்றியும் நிறைந்திருக்கும்.


கன்னி பாபா வாங்காவின் கூற்றுப்படி, கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் சிறப்பாக இருக்கும். அதுவும் இந்த 3 மாதங்கள் சனி பகவானின் சிறப்பான அருள் கிடைக்கும். இதனால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். தொழில் மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். மொத்தத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.


கும்பம் பாபா வாங்காவின் கூற்றுப்படி, கும்ப ராசிக்காரர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். செல்வம் பெருகும். வெற்றிகள் குவியும். மொத்தத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும், முன்னேற்றமும் நிறைந்திருக்கும்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post