கிளிநொச்சி ஆனையிறவு பகுதியில் விபத்து! கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு பகுதியில் இன்று விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் டிசம்பர் சேதமடைந்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாடு ஒன்று வீதிக்கு குறுக்காக சென்று கொண்டிருந்தபோது வீதியில் பயணித்த பேருந்து ஒன்று விபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பேருந்தின் சாரதி வேகத்தை குறைத்து பேருந்தை நிறுத்தினார்.
இதன்போது பேருந்தின் பின்னால், சென்றுகொண்டிருந்த பட்டா ரக வாகனமும் சடுதியாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் பின்னால் சென்றுகொண்டிருந்த டிப்பர் வேக கட்டுப்பாட்டை இழந்து பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.



