கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று திரும்பி வரும் வழியில் இடம்பெற் விபத்தில் சிக்கி ஓட்டமாவடியைச் சேர்ந்த வைத்தியபீட மாணவன் மரணம் பிற்பகல் 4.30 மணியளவில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் ஓட்டமாவடியைச்சேர்ந்த கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார். அவர் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று ஓட்டமாவடி நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார். 23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் ஓட்டமாவடி மர்கஸ் பள்ளிவாயல் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது சடலம் தற்போது மாவடிவேம்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
